
சேலம்: மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் காா் ஓட்டுநர் கனகராஜ் அண்ணன் தனபால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் அண்ணன் தனபால் நெஞ்சுவலியின் காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் தனபால் கடந்த சில நாட்களாக கொடநாடு வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆத்தூர் இளங்கோவன் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார்.
இதனிடையே, கடந்த 14 ஆம் தேதி கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு தனபால் ஆஜரானார்.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை திடீரென தனபால் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தனபால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வியாழக்கிழமை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான கனகராஜ் சனிக்கிழமை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.