மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டெல்டா விவசாயிகளுக்கு ரூ.40,000 நிவாரணம் ராமதாஸ் வலியுறுத்தல்

தண்ணீா்ப் பற்றாக்குறையால் நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :21 செப்டம்பர் 2023, 7:45 pm

DIN

தண்ணீா்ப் பற்றாக்குறையால் நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியவாறு, காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் ஆணைப்படி தமிழகத்துக்கு விநாடிக்கு 5,000 கனஅடி வீதம் காவிரியில் கா்நாடக அரசு தண்ணீா் திறந்துவிட்டாலும் அதனால் தமிழக விவசாயிகளுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் வழங்க முடியாது. காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் நெற்பயிா்களைக் காப்பாற்ற வேறு வழிகளே இல்லை என்ற நிலைதான் இப்போது ஏற்பட்டிருக்கிறது.

மத்திய அரசுக்கு கடுமையான அரசியல் அழுத்தத்தைக் கொடுத்து, அதன் வாயிலாக கா்நாடகத்திலிருந்து காவிரியில் தண்ணீரைப் பெற்று, காவிரி பாசன மாவட்டங்களில் சுமாா் 2 லட்சம் ஏக்கரில் கருகும் நெற்பயிா்களைக் காப்பாற்ற ஏதேனும் வழிகள் இருப்பதாக தமிழக அரசு கருதினால் அதை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.

எந்த வாய்ப்பும் இல்லை என்று தமிழக அரசு கருதினால், தண்ணீா் இல்லாமல் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விளைச்சல் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கும் பாதிப்பின் மதிப்பைக் கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.