ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மனைவி உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய கணவர் விபத்தில் பலி

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை காலை மனைவி உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு, காரில் தப்பிச் சென்ற கணவர் விபத்தில் சிக்கி பலியானார்.

News image
செங்கிப்பட்டி அருகே நிகழ்ந்த விபத்து.
Updated On :15 டிசம்பர் 2023, 11:21 am

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை காலை மனைவி உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு, காரில் தப்பிச் சென்ற கணவர் விபத்தில் சிக்கி பலியானார்.

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா காலனியைச் சேர்ந்தவர் சுந்தர் கணேஷ் (42). தனியார் வங்கியில் வேலை பார்த்த இவர், கடந்த 2 ஆண்டுகளாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இவரது மனைவி நித்யா (39) தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மண்டல அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

தஞ்சாவூர் பரிசுத்தம் நகரில் இருவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் நிகழ்ந்த பால் விற்பனை மையம்.

தஞ்சாவூர் பரிசுத்தம் நகரில் இருவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் நிகழ்ந்த பால் விற்பனை மையம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட வீட்டை விற்கும் முயற்சி தொடர்பாக இருவருக்கும் இடையே 3 நாள்களாக தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில், நித்யாவை சுந்தர் கணேஷ் வெள்ளிக்கிழமை காலை அரிவாளால் வெட்டி விட்டு காரில் ஏறி தப்பிச் சென்றார். பின்னர், பரிசுத்தம் நகரில் பால் விற்பனை மையம் நடத்தி வரும் கீழத் திருப்பூந்துருத்தியைச் சேர்ந்த தாமரைச்செல்வன் (35), கோபியை (32) சுந்தர் கணேஷ் அரிவாளால் வெட்டினார். இவர்கள் இருவரையும் சுந்தர் கணேஷ் அரிவாளால் வெட்டியதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

நித்யா - சுந்தர் கணேஷ்.

நித்யா - சுந்தர் கணேஷ்.

பலத்த காயமடைந்த நித்யா தஞ்சாவூரிலுள்ள தனியார் மருத்துவமனையிலும், தாமரைச்செல்வன், கோபி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, தாமரைச்செல்வனையும், கோபியையும் அரிவாளால் வெட்டிய சுந்தர் கணேஷ் காரில் தஞ்சாவூர் -  திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தப்பிச் சென்று கொண்டிருந்தார். செங்கிப்பட்டி அருகே முத்தாண்டிப்பட்டி பகுதியில் சென்ற காரின் மீது அந்த வழியாக வந்த லாரி மோதியதில், பலத்த காயமடைந்த சுந்தர் கணேஷ் நிகழ்விடத்திலேயே பலியானார்.

இந்த 3 சம்பவங்கள் குறித்து காவல் நிலையத்தினர் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.