
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் பூத் கமிட்டி; இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தியதற்கான களப் பணி குறித்து மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்.
மேலும், ஏற்கெனவே அறிவித்தப்படி தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் நாளை(நவ.21) மாலை 4 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.