தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று(செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, ஆவடி, கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாநகராட்சிகளின் ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
கோவை மாநகராட்சி ஆணையர் எம்.பிரதாப் ஐஏஎஸ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சியின் (வடக்கு) துணை ஆணையராக இருந்த சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ், கோவை மாநகராட்சி ஆணையராக நியமனம்.
பொள்ளாட்சி சார் ஆட்சியர் பிரியங்கா ஐஏஎஸ், திருவாரூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக மாற்றம்.
தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக மாற்றம்.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி ஈரோடு மாநகராட்சி ஆணையராக நியமனம்.
ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்ப்பக ராஜ், உயர்கல்வித் துறையின் துணை செயலாளராக மாற்றம்.
சென்னை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையர் ஷேக் அப்துல் ரஹ்மான், ஆவடி ஆவடி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்,
அதுபோல மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரவீன் குமார், சென்னை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையராக நியமனம்.
கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் மதுபாலன், மதுரை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒசூர் சார் ஆட்சியர் சரண்யா ஐஏஎஸ், கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க | காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தீ விபத்து எதிரொலி: தில்லி ஹோட்டல் கொள்கை மீது கேள்விக்குறி

தூத்துக்குடியில் அகில இந்திய கைப்பந்து போட்டி: ஜூன் 9இல் தொடக்கம்

சபரிமலை தங்கக் கவச வழக்கில் தற்போதைக்கு அரசு தலையிட முடியாது: தேவஸ்வம் அமைச்சா் கே.முரளீதரன்

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு: மாணவா்களுக்கு உற்சாக வரவேற்பு
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



