பல்லடம் பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சியால் செடிகளிலேயே தக்காளி வீணாகி வருகிறது.
பல்லடம் பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சியால் செடிகளிலேயே தக்காளி வீணாகி வருகிறது.

மீண்டும் கண்ணீரை வரவழைக்குமா தக்காளி விலை?

மீண்டும் கண்ணீரை வரவழைக்குமா தக்காளி விலை?

தருமபுரி: கடுமையான வெப்பம் அதிகரித்து வருவதாலும் போதுமான தண்ணீர் இல்லாததாலும், தக்காளி செடிகள் கருகி வருகின்றன. இதனால் மீண்டும் தக்காளி விலை கண்ணீரை வரவழைக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்திலேயே மிகப்பெரிய காய்கறி சந்தையாகக் கருதப்படும் பாலக்கோடு சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 100 டன் தக்காளி வந்து கொண்டிருந்த நிலையில், வெறும் 3 டன் தக்காளிதான் வந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல்லடம் பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சியால் செடிகளிலேயே தக்காளி வீணாகி வருகிறது.
டெல்டா, மேற்கு மாவட்டங்களில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்!

இதனால், சில வாரங்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் கிலோ தக்காளி ரூ.7 - 10க்கு விற்பனையாகி வந்த நிலையில், தற்போது ரூ.26 - 30 வரை விற்பனை செய்யப்படுகிறது. விளைநிலங்களில் கடும் கோடை வெப்பம் காரணமாக, தக்காளி செடிகள் கருகி வருவதால் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை தக்காளி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி சந்தையிலிருந்து கோவை, சேலம், திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களுக்கும் தக்காளி கொண்டு செல்லப்படுகிறது. ஒட்டுமொத்த மாநிலத்தில் தக்காளி விளைச்சலில் 9-10 சதவீதத்தை தருமபுரி மாவட்டமே கொண்டிருக்கும்.

பல்லடம் பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சியால் செடிகளிலேயே தக்காளி வீணாகி வருகிறது.
எங்கே வேலை? இன்னமும் 30% ஐஐடி பட்டதாரிகளுக்கு வேலைகிடைக்கவில்லை!

இது குறித்து பாலக்கோடு வியாபாரி கணேசன் கூறுகையில், வழக்கமாக ஏப்ரல் மாதத்தில்தான் சந்தை உச்சத்தை தொடும். குறைந்தது 100 டன் தக்காளி வரவு இருக்கும். இந்த ஆண்டுதான் முதல் முறையாக 3 டன்களுக்கும் குறைவான தக்காளியே வந்துள்ளது. ஆனால், மே மாதத்தில்தான் விளைச்சல் குறைந்து வரத்தும் குறையும். ஆனால் இந்த ஆண்டு கடுமையான தண்ணீர் பஞ்சம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் இந்த கோடை முடிவதற்குள் நிலைமை மோசமாகலாம் என்கிறார்.

இங்கு கடந்த வாரத்தில் வெப்ப அளவானது 41 டிகிரி செல்சியஸைத் தொட்டுவிட்டது. எப்போதும் மே மாதத்தில்தான் இந்த வெப்ப அளவு ஏற்படும். பென்னாகரம், பாலக்கோடு பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் நிலவுவதால் தக்காளி செடிகள் வளர முடியாமல் கருகிவிட்டன. பூ, காயாகி, கனியாக நிறைய தண்ணீர் ஊற்ற வேண்டும். அவ்வளவு தண்ணீரும் இல்லாமல், கோடை வெயிலும் கொளுத்தியதால் செடிகள் மிக விரைவாகவே கருகிவிட்டன என்கிறார்கள் விவசாயிகள்.

எனவே, கோடை வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க தக்காளி வரத்து மேலும் குறையலாம் என்றே அஞ்சப்படுகிறது. கடந்த ஆண்டில் தக்காளி விலை இரட்டைச் சதத்தைத் தொட்ட நிலையில், மீண்டும் அதுபோன்ற நிலை ஏற்பட்டு, இல்லத்தரசிகளின் கண்களில் கண்ணீரை வரவழைக்குமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com