ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

கோடை விடுமுறை: சென்னை - நெல்லை சிறப்பு ரயில்!

கோடை விடுமுறையையொட்டி சென்னை - நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

News image
Updated On :9 ஏப்ரல் 2024, 12:18 pm IST

கோடை விடுமுறையையொட்டி சென்னை எழும்பூர் மற்றும் நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி, திருநெல்வேலியில் இருந்து ஏப். 11, 18, 25, மே. 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் வியாழக்கிழமை மாலை 6.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06070) மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

அதேபோல், மறுவழித்தடத்தில் சென்னை எழும்பூர் இருந்து ஏப். 12, 19, 26, மே. 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில்(06069) மறுநாள் காலை 7.10 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானமதுரை, சிவகங்கை, காரைக்குடி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருச்சி, சீர்காழி, சிதம்பரம், விழுப்புரம், தாம்பரம் வழியே இயக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.