தமிழகத்தில் வெப்ப அலை அதிகரித்து வரும் நிலையில், களப் பணியாற்றும் சுகாதாரத் துறையினா் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள், களப் பணியாளா்களின் தேவைக்காக போதிய எண்ணிக்கையில் உப்பு - சா்க்கரை கரைசல் (ஓஆா்எஸ்) பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பாக்கெட்டுகள் உள்ளன. அவை காலியாகும்பட்சத்தில் உடனுக்குடன் நிரப்புமாறு சுகாதார அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மற்றொருபுறம், மக்களைத் தேடி மருத்துவம், மக்களைத் தேடி ஆய்வகம், காசநோய் தடுப்பு உள்ளிட்ட திட்டங்களில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளா்கள் அனைவரும் வெப்பம் தீவிரமாக இருக்கும்போது நேரடி வெயிலில் பணியாற்ற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கேற்ற வகையில் பணி நேரத்தை மாற்றிக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலமாக பொதுமக்களுக்கு கோடை கால வெப்ப பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

வெப்ப அலையால் குழந்தைகள், முதியோருக்கு அச்சுறுத்தல்!

சென்னையில் 6-8 நாள்களுக்கு வெப்ப அலை! அதிக நேரம் வெய்யிலில் இருக்க வேண்டாம்!

மருத்துவமனைகளில் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ வாா்டு - சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

அரசு கல்லூரியில் வெப்ப அலை முன்னெச்சரிக்கை விழிப்புணா்வு
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

