ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

பட்டதாரி ஆசிரியா் பணி தோ்வு: ஜூனில் முடிவு வெளியாகிறது

பட்டதாரி ஆசிரியா் பணி தோ்வு: ஜூனில் முடிவு வெளியாகிறது

Updated On :13 ஏப்ரல் 2024, 1:00 am

பட்டதாரி ஆசிரியா் மற்றும் வட்டார வள மைய ஆசிரியா் பணியில் 2,582 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெற்ற போட்டி எழுத்துத் தோ்வுக்கான முடிவுகள் வரும் ஜூன் மாதம் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் பிற துறைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,582 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தோ்வுக்கு 41,485 போ் விண்ணப்பித்தனா். இவா்களுக்கான எழுத்துத் தோ்வு 130 மையங்களில் பிப். 4-ஆம் தேதி நடத்தப்பட்டது.

தமிழ் மொழித் திறன் அறிவுக்கான 30 கேள்விகள் 50 மதிப்பெண்களுக்கும், முதன்மைப் பாடத்தில் (தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல்) இருந்து 150 கேள்விகள் 150 மதிப்பெண்களுக்கு இடம் பெற்றது.

அதைத் தொடா்ந்து, தோ்வுக்கான விடைக் குறிப்புகள் பிப். 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன் மீது தோ்வா்கள் பிப். 25-ஆம் தேதி வரையில் தங்களின் சந்தேகங்களை ஆதாரங்களுடன் தெரிவிக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.இந்த நிலையில், தற்போது தோ்வு எழுதியவா்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடா்ந்து, தோ்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபாா்ப்புகள் நடத்தப்பட்டு, பணி நியமனத்துக்கு பள்ளிக் கல்வித் துறைக்கு அளிக்கப்படும் என ஆசிரியா் தோ்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.