தமிழகத்தில் 3 மணி நிலவரம்: 51.41% வாக்குகள் பதிவு!

பிற்பகல் 3 மணி நிலவரப்படி 51.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 3 மணி நிலவரம்: 51.41% வாக்குகள் பதிவு!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 51.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தருமபுரி மக்களவைத் தொகுயில் 57.86 சதவீதமாகவும், நாமக்கலில் 57.67, கள்ளக்குறிச்சி 57.34, ஆரணி 56.73, கரூர் 56.65, பெரம்பலூர் 56.34, சேலத்தில் 55.53, சிதம்பரம் 55.23, விழுப்புரம் 54.43, ஈரோட்டில் 54.13, அரக்கோணம் 53.83, திருவண்ணாமலையில் 53.72, விருதுநகரில் 53.45, திண்டுக்கல் 53.43, கிருஷ்ணகிரி 53.37, வேலூரில் 53.17 சதவீதமாகவும்,

பொள்ளாச்சியில் 53.14 சதவீதமாகவும், நாகப்பட்டினத்தில் 52.72, தேனியில் 52.52, நீலகிரியில் 52.49, கடலூரில் 52.13, தஞ்சாவூரில் 52.02, மயிலையில் 52.00, சிவகங்கையில் 51.79, தென்காசியில் 51.45, ராமநாதபுரம் 51.16, கன்னியாகுமரியில் 51.12, திருப்பூர் தொகுதியில் 51.07, திருச்சியில் 50.70, தூத்துக்குடியில் 50.41, கோவையில் 50.33, காஞ்சிபுரத்தில் 49.94, திருவள்ளூரில் 49.82, நெல்லையில் 48.58, மதுரையில் 47.38, ஸ்ரீபெரும்புதூரில் 45.96, வட சென்னையில் 44.84, தென் சென்னையில் 42.10, மத்திய சென்னையில் 41.47 வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 3 மணி நிலவரம்: 51.41% வாக்குகள் பதிவு!
வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 3 மணி நிலவரப்படி 45.43 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையத் தலைவர் சத்தியபிரத சாகு தெரிவித்துள்ளார்.

சென்னையில் வெயில் கொளுத்தி வரும் நிலையில் 3 தொகுதிகளில் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்று வருகின்றது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், பிற்பகல் 3 மணி வரை 51.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையவிருக்கிறது. கடைசி நிமிடங்களில் வருவோருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு அவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 3 மணி நிலவரம்: 51.41% வாக்குகள் பதிவு!
சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். தேர்தலில் 950 பேர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com