இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் 11 மணி நிலவரம் வெளியானது.

News image
Updated On :19 ஏப்ரல் 2024, 6:46 am

DIN

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் 11 மணி நிலவரப்படி 24.37% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 26.58 வாக்குகள் பதிவாகியுள்ளது. மிகக் குறைந்த அளவாக மத்திய சென்னையில் 20.09 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. பெரும்பாலான தொகுதிகளில் 24 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

பொதுவாக சென்னையில் வாக்குப்பதிவு மந்தமாகவே நடந்து வருகிறது. தெற்கு, வடக்கு, மத்திய சென்னை என மூன்று தொகுதிகளிலும் 20 முதல் 22 சதவீத வாக்குகள்தான் 11 மணி வரை பதிவாகியுள்ளன. மதுரையிலும் 22.73 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கிறது.

இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையவிருக்கிறது. கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு அவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 6 கோடியே 23 லடச்த்து 33 ஆயிரத்து 925 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். தேர்தலில் 950 பேர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.