மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

News image
Updated On :23 ஏப்ரல் 2024, 2:09 pm

DIN

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை திருமங்கலத்தில் பிரபல தனியார் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் வணிக வளாகத்தில் தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்வார்கள்.

அதே போல் இன்றும் அந்த தனியார் வணிக வளாகத்துக்கு 1000க்கும் மேற்பட்ட மக்கள் வருகை தந்து இருந்தனர். இந்தநிலையில் இன்று காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அந்த தனியார் விடுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக இமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.

அதன் அடிப்படையில் கோயம்பேடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரனை மேற்கொண்டனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் வணிக வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

வணிக வளாகத்துக்குள் இருந்த மக்களை பாதுகாப்பாக காவல்துறையினர் வெளியேற்றினர். வணிக வளாகத்தில் இருக்கும் உணவகம், திரையரங்கம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது.

ஏற்கனவே சென்னையில் தனியார் பள்ளிகள் மற்றும் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. விசாரணையில் அந்த மிரட்டல் சம்பவங்கள் புரளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடும் நபர்கள் குறித்து தொடர்ந்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் சென்னையில் பிரபல தனியார் வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்துவரும் நிலையில், இதுவரை வெடிகுண்டு மிரட்டல் அனுப்பியவரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெறாதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.