மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

News image
கோப்புப் படம்.
Updated On :26 ஏப்ரல் 2024, 11:43 am

DIN

சென்னை விமான நிலையத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் ரூபாய் 75 மதிப்பிலான தங்க நகைகள் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமான நிலையத்தில், உள்ள கழிவறையை விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் தூய்மை செய்துகொண்டிருந்தனர். அப்போது கழிவறையின் அருகே இருந்த குப்பைத் தொட்டி ஒன்றில், பார்சல் ஒன்று கிடப்பதை அவர்கள் கண்டனர். உடனடியாக இதுகுறித்து விமான நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு ஏதேனும் இருக்குமோ என்ற சந்தேகத்தின் பெயரில் பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதில் 4 தங்க கட்டிகள் இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த பார்சலை பாதுகாப்பு அதிகாரிகள், சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 4 தங்கக்கட்டிகளின் மொத்த எடை ஒரு கிலோ, 250 கிராம் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ. 85 லட்சம் என அதிகாரிகள் கூறினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சென்னை விமான நிலையத்தில் வருகை பகுதியில் உள்ள, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.