கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

கோவை மக்களைவத் தொகுதி தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

2019 மற்றும் 2021 தேர்தலில் வாக்களித்தவர்களில் பலரின் பெயர் இம்முறை நீக்கப்பட்டுள்ளது. பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். விடுபட்டவர்கள் வாக்களிக்கும் வரை முடிவை நிறுத்தி வைக்கக்கோரி ஆஸ்திரேலியாவில் மருத்துவராக உள்ள சுதந்திர கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. கோவை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டிருப்பதாக புகாா்கள் எழுந்தன. கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட இடையா்பாளையத்தில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் பாஜகவினா் மற்றும் வாக்காளா்கள் சிலா் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

இதனிடையே, வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்கள் நீக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாருக்கு கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான கிராந்திகுமாா் பாடி விளக்கம் அளித்தார். அதில், வாக்காளா் பட்டியலில் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாருக்கு, தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள்படி உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே வாக்காளா் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com