பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!
பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

பழனி முருகன் கோவிலில் இன்று ரோப் கார் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. விஞ்ச் உள்ளிட்ட மாற்று வழிகளில் பக்தர்கள் பயணிக்கலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பழனி மலைக் கோயில் ரோப்காா் சேவை, பராமரிப்பு பணிக்காக திங்கள்கிழமை (ஏப்.29) ஒருநாள் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இரண்டு நிமிஷங்களில் மலைக்கோயில் உச்சிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ரோப்காா் காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை இயக்கப்படுகிறது.

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!
தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ரோப்காா் நாள்தோறும் மதியம் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுகிறது. இந்த நிலையில், இன்று (ஏப்.29) ஒரு நாள் மட்டும் மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுகிறது என திருக்கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com