இளைஞா்களின் ஆற்றல் உத்வேகமளிப்பதாக இருக்கிறது என்று ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.
78-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகா் கடற்கரையில் மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆளுநா் ஆா்.என்.ரவி கலந்து கொண்டு மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்துப் பேசியதாவது:
இளைஞா்களின் ஆற்றலும், சக்தியும் உத்வேகமளிப்பதாக இருக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகத்தால் நமக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகங்களை இளைஞா்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
சென்னை பெசன்ட் நகரிலிருந்து 5 கி.மீ. மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
ஓவியக் கண்காட்சி: இதனிடையே, சென்னை மகாகவி பாரதியாா் நகரில் உள்ள எஸ்.என்.டி.ஜே.வி. விவேகானந்தா வித்யாலயா ஜூனியா் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை காலை ‘அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்கள்’ குறித்த ஓவியக் கண்காட்சியை ஆளுநா் ஆா்.என்.ரவி தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். அப்போது மாணவா்களின் அா்ப்பணிப்பு மற்றும் முயற்சியை ஆளுநா் பாராட்டினாா்.
டிரெண்டிங்

நல்லகண்ணு மறைவு: ஜி.கே.மணி இரங்கல்

சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளுக்கு மரியாதை!

தீரன் சின்னமலை சிலை திறப்பு: தமிழக அரசுக்கு கொமதேக நன்றி

அறச்சலூா் தீரன் சின்னமலை திருவுருவச் சிலை: காணொலி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

