
சுதந்திர தினத்தையொட்டி தொடர் விடுமுறை வருவதால் சொந்த ஊர்களுக்குச் செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
சுதந்திர தினம், தொடர் விடுமுறையையொட்டி ஆகஸ்ட் 14, 16, 17 ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
கிளாம்பாக்கத்திலிருந்து ஆகஸ்ட் 14-ல் 470 பேருந்துகளும், ஆகஸ்ட் 16, 17-ல் 365 பேருந்துகளும் இயக்கப்படும்.
கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, வேளாங்கண்ணி, பெங்களூரு, நாகை, ஓசூர், பெங்களூருவுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
கோயம்பேட்டிலிருந்து ஆகஸ்ட் 14-ல் 70 பேருந்துகளும் ஆகஸ்ட் 16, 17-ல் 65 பேருந்துகளும் இயக்கப்படும்.
பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
மாதவரத்தில் இருந்து ஆகஸ்ட் 14, 16, 17-ல் 20 சிறப்புப் பேருந்துகளும்,
ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்ப வசதியாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளை WWW.tnstc.in என்ற இணையதளம் மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.