சந்திரயான் - 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு அப்துல்கலாம் விருதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வழங்கினார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை வியாழக்கிழமை காலை ஏற்றிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து, மக்களுக்கு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், பல்வேறு புதிய திட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.
இதையடுத்து, தமிழ்நாட்டுக்கும், தமிழின வளா்ச்சிக்கும் பங்காற்றியவருக்கு வழங்கப்படும் தகைசால் தமிழர் விருதினை காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரும், இலக்கியவாதியுமான குமரி அனந்தனுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவா்களுக்கு வழங்கப்படும் டாக்டா் அப்துல் கலாம் விருதினை தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநருமான வீரமுத்துவேலுவுக்கு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை செவிலியர் சபீனாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.