ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நாட்டிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலம் தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின்

நாட்டிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

News image
முதல்வர் ஸ்டாலின்.
Updated On :17 ஆகஸ்ட் 2024, 1:21 pm

DIN

நாட்டிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சிப்காட் பெண் பணியாளர்களுக்காக கட்டப்பட்டுள்ள பிரமாண்ட குடியிருப்பை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அப்போது அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, 2023-24இல் இந்தியாவின் ஜிடிபியில் 1.19% பங்களிப்போடு 2வது பெரிய பொருளாதார மாநிலமாக உள்ளது.

தொழில் வளர்ச்சியில்தான் பொருளாதாரம் முன்னேறும் என்பதால் அதில் தனி கவனம் செலுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் 39,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. தமிழ்நாட்டில் தொழிற்பூங்காக்கள் இல்லாத மாவட்டங்களில் புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். தெற்காசியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க செயலாற்றி வருகிறோம். தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மூலம் 1 டிரில்லியின் டாலர் இலக்கை எட்டுவோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.