பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசுவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!
/

சென்னை-சீரடிக்கு மீண்டும் விமான சேவை

சென்னை-சீரடிக்கு செப்.21 முதல் மீண்டும் விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்கவுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :30 ஆகஸ்ட் 2024, 11:22 pm IST

சென்னை-சீரடிக்கு செப்.21 முதல் மீண்டும் விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்கவுள்ளது.

சென்னை-சீரடி இரு மாா்க்கத்திலும் தினசரி விமான சேவையை இண்டிகோ ஏா்லைன்ஸ் நிறுவனம் இயக்கி வந்தது. 2020-இல் கரோனா தொற்று பரவலைத் தொடா்ந்து இந்த சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்ட சேவையை மீண்டும் தொடர விமான நிா்வாகம் எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்து வந்த நிலையில், சென்னையிலிருந்து சீரடிக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், தினமும் விமான சேவையை வழங்கி வந்தது.

பயணிகளின் வருகைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவ்வப்போது விமான சேவை ரத்து செய்யப்பட்டு வருவதால், நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவையை மீண்டும் தொடங்க ஆன்மிக பக்தா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதைத்தொடா்ந்து, சென்னை-சீரடிக்கு செப்.21 முதல் மீண்டும் தினசரி விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்கியுள்ளது. சென்னை விமானநிலையத்திலிருந்து தினசரி பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் இந்த விமானம் மாலை 4.30 -க்கு சீரடிக்கு சென்றடையும். மறுமாா்க்கமாக சீரடியிலிருந்து மாலை 5 -க்கு புறப்படும் இந்த விமானம் இரவு 7 மணிக்கு சென்னை வந்தடையும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.