சென்னை மாநகராட்சிப் பகுதியில் அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 1.04 லட்சமாக உயர்ந்திருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
"சென்னை மாநகரில் அனைத்து வார்டுகளிலும், ராயபுரம், அண்ணாநகர், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் உள்ள 7 அரசு மருத்துவமனைகளிலும் மொத்தம் 383 இடங்களில் தற்போது அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் காலை நேரத்தில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், பொங்கல் ஐந்து ரூபாய்க்கும், மதிய நேரத்தில் சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம் மற்றும் கருவேப்பிலை சாதம் தலா ஐந்து ரூபாய்க்கும், தயிர் சாதம் மூன்று ரூபாய்க்கும் மற்றும் மாலை நேரத்தில் இரண்டு சப்பாத்திகள் மூன்று ரூபாய்க்கும் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதல்வர் விஜய்யின் உத்தரவின்படி, அம்மா உணவகங்களை மேம்படுத்தி தரமான உணவுகளை மக்களுக்கு வழங்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் சராசரியாக ஒரு நாளில் 67,164 பேர் அம்மா உணவகங்களில் சாப்பிட்டனர். தற்போது தினசரி சராசரியாக 1,04,102 பயனாளிகள் அம்மா உணவகங்களில் சாப்பிட்டு வருகின்றனர்.
அம்மா உணவகங்களின் வாயிலாக கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ. 87,60,489/- வருவாய் வரப்பெற்ற நிலையில் தற்போது ரூ.1,35,78,548/-ஆக உயர்ந்துள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மூலமாக 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. சமீப காலங்களில் இவ்வுணவகத்தில் அளிக்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என்று முதல்வர் விஜய்யின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட அரசுத் துறைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் விஜய், அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும், சமையல் உபகரணங்களை உடனடியாகக் கொள்முதல் செய்யுமாறும், சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளை தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வழங்கவும் உத்தரவிட்டிருந்தார்.
Summary
The Greater Chennai Corporation has stated that the number of people using Amma Canteens daily has increased to 1,04,102.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
லஞ்சம்! சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் சஸ்பெண்ட்!
கடும் நிதி நெருக்கடியில் சென்னை மாநகராட்சி! நிலுவை மட்டும் ரூ.2,000 கோடி? குப்பை வண்டி வருமா?

அமைச்சர் பங்கேற்ற சென்னை மாநகராட்சி நிகழ்ச்சியை புறக்கணித்த மேயர் பிரியா!

கேரள நடிகர் சங்கத்திலிருந்து ரேவதி, பத்மப்ரியா விலகல்! இதுதான் காரணமா?
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan




