ஊத்தங்கரையில் 503 மி.மீ. மழை.. 300 ஆண்டுகளுக்குப் பிறகு!

ஊத்தங்கரையில் 503 மி.மீ. மழை.. 300 ஆண்டுகளுக்குப் பிறகு! கள நிலவரம் சொல்வதென்ன?
ஊத்தங்கரை
ஊத்தங்கரை
Published on
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கடந்த 24 மணி நேரத்தில் 503 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கடந்த 300 ஆண்டுகளுக்குப் பிறகு, கிருஷ்ணகிரியில் அதிகளவில் மழை நேற்று பதிவாகியிருக்கிறது.

மழை நிலவரங்களை அவ்வப்போது பதிவிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் பிரதீப் ஜான், தனது முகநூலில் கூறியிருப்பதாவது, ஃபெங்ஜால் புயல், என்னடா பண்ணிட்டு போய் இருக்க. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வரலாறு காணாத வகையில் 503 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது. அது மட்டுமா? கிருஷ்ணகிரியில் 300 ஆண்டுகளில் பெய்யாத மழை பெய்திருக்கிறது. தருமபுரி மாவட்டம் ஹாரூர் பகுதியில் 331 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

-

ஃபெங்ஜால் புயல், மரக்காணம் - புதுச்சேரி இடையே சனிக்கிழமை இரவு கரையைக் கடந்தது. இதனால் விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு தொடங்கிய மழை ஞாயிற்றுக்கிழமை இரவு வரை இடைவிடாமல் பெய்தது. இதனால், மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, மரக்காணம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரியில் இதுவரை மக்கள் பார்த்திராத வகையில் மழை கொட்டித்தீர்த்துள்ளது. தருமபுரி - திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில், எதிர்பாராத வகையில் மிககனமழை பெய்ததால், பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், பேருந்து நிலையத்திலிருந்து சற்றுத் தொலைவில் உள்ள ஏரி நிரம்பி வெளியேறிய வெள்ள நீர் வந்த வேகத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. கார்கள் மட்டுமல்ல, சுற்றுலா வாகனங்களும் சாலையிலிருந்து அடித்துச் செல்லப்பட்டன. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com