தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

தமிழகத்தில் தனியார் பால், தயிர் விலை உயர்வு!! இன்றுமுதல் அமல்

தமிழகத்தில் பால், தயில் விலை உயர்த்தப்பட்டுள்ளது பற்றி...

கோப்புப்படம்

Published On :

தமிழகத்தின் நான்கு முன்னணி பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிரின் விலையை உயர்த்தியுள்ளன. உயர்த்தப்பட்ட விலைப் பட்டியல் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த நான்கு நிறுவனங்களும் மாநிலத்தின் மொத்த பால் சந்தை பங்கில் 45 சதவிகிதத்துக்கு மேல் வைத்துள்ள நிலையில், பால் விலை லிட்டருக்கு ரூ. 2 முதல் 4 வரையும், தயிர் மற்றும் மோரின் விலை லிட்டருக்கு ரூ. 4 முதல் 6 வரையும் உயர்த்தியுள்ளன.

ஆனால், பால் கொள்முதல் விலையை எந்த நிறுவனமும் உயர்த்தவில்லை.

திருமலை நிறுவனத்தின் பால் லிட்டருக்கு ரூ. 58-ல் இருந்து ரூ. 62 ஆகவும், முழு க்ரீம் பால் லிட்டருக்கு ரூ. 66-ல் இருந்து ரூ. 70 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதே நிறுவனத்தின் 450 கிராம் தயிர் ரூ. 4 உயர்த்தப்பட்டு ரூ. 36 ஆகவும், 200 மி.லி. மோர் பாக்கெட் ரூ. 4 உயர்த்தப்பட்டு ரூ. 10 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

ஹெரிடேஜ் நிறுவனத்தின் 457 மி.லி. பால் ரூ. 31-ல் இருந்து ரூ. 33-ஆகவும், 950 மில்லி பால் ரூ. 62-ல் இருந்து ரூ. 64 ஆகவு உயர்த்தப்பட்டுள்ளது.

டோட்லா நிறுவனத்தின் முழு க்ரீம் பால் லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தி ரூ. 70 ஆகவும், சாதாரண தரப்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தி 62 ஆக விற்கப்படுகிறது.

ஸ்ரீரங்கம் பால் நிறுவனம் தரப்படுத்தப்பட்ட பால் விலையை லிட்டருக்கு ரூ. 5, முழு க்ரீம் பால் விலையை லிட்டருக்கு ரூ. 4 உயர்த்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்கள் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்டு இன்னும் மீளாத சூழலில், அத்தியாவசியப் பொருள்களான பால், தயிர் விலையை தனியார் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.