முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி பேரவைத் தலைவர் அப்பாவுவைத் தலைவராகக் கொண்ட குழுவால் தயாரிக்கப்பட்ட 'சட்டமன்ற நாயகர்-கலைஞர்' நூற்றாண்டு விழா சிறப்பு மலர் இன்று வெளியிடப்பட்டது.
இன்று (9.12.2024) சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு முன்னிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, நீர்வளத்துறை அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன் பெற்றுக் கொண்டார்.
மேலும் 'நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் பேரவையின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகைகளை முதல்வர் வழங்கினார்.
இதையும் படிக்க | விசிக ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம்!
இந்த நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, உயர் கல்வித் துறை அமைச்சரும், விழாக் குழு இணைத் தலைவருமான முனைவர் கோவி. செழியன், சட்டமன்றப் பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, அரசு தலைமைக் கொறடா கா. ராமச்சந்திரன், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் கு. செல்வப்பெருந்தகை மற்றும் அரசு அலுவலர்களுடன் விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் கலந்துகொண்டார்.
முன்னதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தொகுத்துள்ள ‘எல்லோருக்குமான தலைவர் – அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் டிசம்பர் 6 அன்று நடைபெற்றது. இந்த விழாவில் விசிக தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இருவரும் பங்கேற்கவிருப்பதாகக் கூறப்பட்டது. இரு தலைவர்களும் ஒரே மேடையில் பங்கேற்பது குறித்து பல விமர்சனங்கள் வந்தன. இந்நிலையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்தார். இந்த விவகாரம் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதன்பின்னர், சென்னையில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு நூலான 'ICONOCLAST' (ஐகானோக்ளாஸ்ட்) நூல் வெளியீட்டு விழா சென்னை விசிக தலைமை அலுவலகத்தில் டிச. 7 அன்று நடைபெற்ற நிலையில் அதில் திருமாவளவன் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு விவகாரம் : அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட தொல். திருமாவளவன் வலியுறுத்தல்
கூட்டணி ஆட்சிக்கான யோசனையை முன்வைத்த முதல் இயக்கம் விசிக: திருமாவளவன்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் தொல். திருமாவளவன் சந்திப்பு

விஜய்யை முன்வைத்து பல சூதாட்டங்கள்: தொல். திருமாவளவன்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி


