ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

தேனி அழைத்துச் செல்லப்பட்ட சவுக்கு சங்கர்!

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தேனி அழைத்துச் செல்லப்பட்ட சவுக்கு சங்கர்..

News image

தேனியில் சவுக்கு சங்கர். - Din

Updated On :18 டிசம்பர் 2024, 11:46 am IST

தேனி: சென்னையில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் புதன்கிழமை தேனிக்கு அழைத்து வரப்பட்டார்.

கஞ்சா வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருந்ததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட சவுக்கு சங்கரை சென்னையில் செவ்வாய்க்கிழமை கைது செய்த போலீசார், இன்று தேனிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.

காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கடந்த மே 4 ஆம் தேதியன்று தேனியில் தங்கியிருந்த பிரபல யூடியபர் சவுக்கு சங்கர் கோயமுத்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.‌

அப்போது அவர் தங்கியிருந்த விடுதி அறை மற்றும் காரில் இருந்த சுமார் 2.6 கிலோ கஞ்சா இருந்ததாக சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர், கார் ஓட்டுநர் என 3 பேர் மீது பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான வழக்கிலும் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் பின்னர் நீதிமன்ற ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருந்த சவுக்கு சங்கருக்கு நேற்று மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலச் செல்வன் பிடிவாரண்ட் பிறப்பித்தார். இதையடுத்து சென்னையில் இருந்த சவுக்கு சங்கர் நேற்று கைது செய்யப்பட்டார்.‌

அதனைத் தொடர்ந்து சென்னைக்கு விரைந்த தேனி போலீசார், சவுக்கு சங்கரை துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் இன்று காலை பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.‌

பின்னர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவமனை பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். தொடர்ந்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் பழனிசெட்டிபட்டி போலீசார் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.