தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

அழுக்கு படிந்த காரில் எழுதியதாக சிறுவன் மீது தாக்குதல்! இருவருக்கு கத்திக்குத்து!

அழுக்கு படிந்த காரில் சிறுவன் எழுதியதாகக் கூறி, இருவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

News image
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செல்வராஜ்.
Updated On :20 டிசம்பர் 2024, 6:05 am

DIN

அழுக்கு படிந்த காரில் எழுதியதாக சிறுவனை தாக்கி, இருவரை கத்தியால் குத்தி விட்டு தலைமறைவான இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம் சேவூர் அருகே அ.குரும்பாபாளையம் ஆதிராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்த கணேசன் - சுதா தம்பதியரின் மகன் சத்தியவாசன் (9). அ.குரும்பபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், சாலையில் நடந்து சென்ற சிறுவனை, அப்பகுதியில் வசித்து வரும் மோகன் என்பவர் அழைத்து, அழுக்கு படிந்த காரில் எழுதியதாகக் கூறி, சிறுவன் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால், சிறுவன் சத்தியவர்ஷன், தான் எழுதவில்லை எனக் கூறியுள்ளார். இருப்பினும் அதைக் கேட்காத மோகன், சிறுவனை வீட்டிற்குள் அழைத்துச் சென்று கதவை பூட்டிவிட்டு, சிறுவனை பலமாக தாக்கி உள்ளார்.

கருப்பாத்தாள்

கருப்பாத்தாள்

இந்த நிலையில், நீண்ட நேரம் ஆகியும் சிறுவனைக் காணாத, பெற்றோரும் அவரது உறவினர்களும் சிறுவனைத் தேடி வந்தபோது, மோகன் வீட்டில் சிறுவனின் சத்தம் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இதுகுறித்து தட்டிக் கேட்க சென்ற உறவினர்கள் செல்வராஜ், கருப்பாத்தாள் ஆகிய இருவரையும், மோகன் கத்தியால் குத்தி விட்டு, தப்பி ஓடிவிட்டார்.

பாதிப்புக்குள்ளான சிறுவனும், கத்தியால் வெட்டுப்பட்ட செல்வராஜ் கருப்பாத்தாள் ஆகியோர் அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் சேவூர் அருகே அ.குரும்பபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.