விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து விழுப்புரத்தில் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து விழுப்புரத்தில் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சி பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.
இதனிடையே அதிமுக ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் அதிமுகவினர் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீஸார் அவர்களை கைது செய்தனர். மேலும் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். இப்போராட்டம் காரணமாக விழுப்புரம் நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேபோல் அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...