விழுப்புரத்தில் புத்தகத் திருவிழா தொடக்கம்: அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தொடங்கி வைத்தார்!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்தித் திடலில் 2-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவை வெள்ளிக்கிழமை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தொடங்கி வைத்து அரங்குகளைப் பார்வையிட்டார்.
விழுப்புரம் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்து அரங்குகளைப் பார்வையிட்ட அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் ​.
விழுப்புரம் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்து அரங்குகளைப் பார்வையிட்ட அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் ​.


விழுப்புரம்: விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்தித் திடலில் 2-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவை வெள்ளிக்கிழமை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ்  தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தொடங்கி வைத்து அரங்குகளைப் பார்வையிட்டார்.

விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்தியபுத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் 2 -ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் வெள்ளிக்கிழமை தொடங்கி பிப்ரவரி 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வில் புத்தகத் திருவிழா தொடக்க விழாவுக்கு  மாவட்ட ஆட்சியர் சி.பழனி தலைமை வகித்தார். விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன் முன்னிலை வகித்தார். சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ்  தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்து அரங்குகளைப் பார்வையிட்டார்.

நிகழ்வில் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், திண்டிவனம் துணை ஆட்சியர் திவ்யான்ஷி நிகம், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேசுவரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த புத்தகத் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் வாசிப்புத் திறனை மேம்படுத்திடும் வகையில் பெருந்திரள் வாசிப்பு விந்தை விழுதுகள் என்ற தலைப்பில் பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகளின் தன்னம்பிக்கை, தகவல் தொடர்பு, சுற்றுச்சூழல் குறித்த உரை நிகழ்வுகள்,பல்வேறு தனித்திறன் போட்டிகள் நடைபெறவுள்ளன. உள்ளூர் எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் வகையில் அவர்களும் பங்கேற்று பேசுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொடர்ந்து மாலையில் பல்வேறு எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பங்கேற்கும் சொற்பொழிவுகள்,பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. 

மேலும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்வுகள், உணவு அரங்குகள், துறை சார்ந்த கண்காட்சி அரங்குகள்,உள்ளூர் நாட்டுப்புறக் கலைஞர்களின் கலைநிகழ்வுகள் போன்றவையும் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஒன்றியத்திலிருந்து பள்ளி மாணவ,மாணவிகளை புத்தகத் திருவிழாவுக்கு அழைத்து வரவும், அதற்கான பேருந்து வசதி ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

புத்தகத் திருவிழாவுக்கு பொதுமக்கள், மாணவ, மாணவிகள் எளிதில் வந்து செல்லும் வகையில்  பேருந்து வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com