சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரைப் பெருவிழா: பந்தல் கால் நிகழ்ச்சி

தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரைப் பெருவிழாவுக்காகப் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரை பெருவிழாவுக்காக வியாழக்கிழமை நடப்பட்ட பந்தல்கால்.
Updated On :9 பிப்ரவரி 2024, 1:43 pm

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரைப் பெருவிழாவுக்காகப் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூர் பெரியகோயிலில் ஆண்டு தோறும் சித்திரைப் பெருவிழா 15 நாள்களுக்கு நடைபெறுவது வழக்கம். 

நிகழாண்டு சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில், சித்திரைத் தேரோட்டம் ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழா ஏப்ரல் 23 ஆம் தேதி கொடி இறக்கத்துடன் நிறைவடைகிறது.

இதையொட்டி, பெரிய கோயில் வளாகத்தில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இதில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பந்தல் கால் நடப்பட்டது.

இதில், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கோ. கவிதா, கோயில் செயல் அலுவலர் ப. மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.