திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது: பிப்.23ல் தேரோட்டம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா புதன்கிழமை(பிப்.14) அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித்திருவிழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித்திருவிழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித்திருவிழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தீர்மானம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா புதன்கிழமை(பிப்.14) அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆவணி மற்றும் மாசித் திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி

பெற்றவையாகும்.இந்த ஆண்டு மாசித் திருவிழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது. அதிகாலை 3 மணியளவில் கொடிப்பட்டமானது வெள்ளிப் பல்லக்கில் வைத்து 9 சந்தி வழியாக கொண்டுவரப்பட்டு அதிகாலை 4.52 மணிக்கு கோயில் பிரகாரத்திலுள்ள செப்புக் கொடிமரத்தில் காப்புகட்டிய ஹரி சிவம் பட்டர் மாசித் திருவிழாவிற்கான கொடியினை ஏற்றினார். தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீ மத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள், திருச்செந்தூர் சார்பு நீதிபதி வசித்குமார், கோயில் அறங்காவலர் கணேசன், இணை ஆணையர் கார்த்திக், திருக்கோயில் பணியாளர்கள், திருச்செந்தூர் நகராட்சி துணைத் தலைவர் செங்குழி ரமேஷ், மாவட்ட அறங்காவலர் வாள் சுடலை, ஏரல் சேர்மன் கோயில் பரம்பரை அக்தர் கருத்தப்பாண்டியன், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர்

வி.பி.ஜெயக்குமார், மாநில பொதுச் செயலர் அரசு ராஜா மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பாதுகாப்புப் பணியில் காவல் ஆய்வாளர்கள் சுந்தரமூர்த்தி, மகாலட்சுமி உள்ளிட்ட போலீசார் ஈடுபட்டனர்.

வருகின்ற பிப்.23 ஆம் தேதி பத்தாம் திருவிழா அன்று திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் ரா.அருள்முருகன், இணை ஆணையர் மு.கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், பா.கணேசன், ந.ராமதாஸ், வி.செந்தில்முருகன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com