வரும் 21ல் மக்கள் நீதி மய்யத்தின் 7ம் ஆண்டு துவக்க விழா

உற்சாக கொண்டாட்டம்: மக்கள் நீதி மய்யம் ஏழு ஆண்டுகள் பயணம்
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

வரும் 21ல் மக்கள் நீதி மய்யத்தின் 7ம் ஆண்டு துவக்க விழா கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கொண்டாடப்பட உள்ளது.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் பிப்ரவரி 21 (21-2-2024) நமது மக்கள் நீதி மய்யத்தின் 7ம் ஆண்டு துவக்க நாளாகும். அந்த நாளை சிறப்புடன் கொண்டாடும் வண்ணம் அன்று கமல்ஹாசன் காலை 10 மணியளவில், நமது தலைமை நிலையத்தில், மக்கள் நீதி மய்யக் கொடியினை ஏற்றிவைத்து தொண்டர்களிடையே சிறப்புரையாற்ற உள்ளார்.

அந்த சீர்மிகு நிகழ்வை சிறப்பிக்கும் பொருட்டு நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள்; அமைப்பு மற்றும் அணிகளைச் சேர்ந்த மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள்; நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் அவசியம் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தாய்மொழி தினத்தில் (பிப்ரவரி 21) பிறந்த மக்கள் நீதி மய்யம் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெல்லும்! வரலாறு அதைச் சொல்லும் !! இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com