மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குமேற்கு வங்கம்: மமதா ஆதரவு எம்எல்ஏ காா் மீது மீண்டும் தாக்குதல்! பொது சட்டம் - ஒழுங்கு தொடர்பான சில தகவல்களைப் பெற விதிக்கப்பட்ட விலக்கு வாபஸ்பட்டாசு விலை 25% உயர்வு

ஏன் இந்த திடீர் பயணம்? ஆளுநர் ஆர்.என். ரவி தில்லி சென்றார்

தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி தில்லி சென்றார்.

ஆளுநர் ஆர்.என். ரவி (கோப்புப் படம்)

Published On :

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, இன்று காலை திடீரென தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த திடீர் பயணத்துக்கான காரணம் தெரியவரவில்லை.

தமிழக சட்டப்பேரவை நடப்பு ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12ஆம் தேதி ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் தொடங்கியது. ஆனால், ஆளுநர் ரவி, தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்துவிட்டு பேரவையிலிருந்து வெளியேறினார். இது அன்றைய தினம் பேசுபொருளாகியிருந்தது.

இந்த நிலையில், தமிழக பேரவையில் இன்று வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவிருக்கிறார்.

இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, திடிரென தில்லி புறப்பட்டுச் சென்றள்ளார். இன்று காலை 6 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

நான்கு நாள்கள் தில்லியில் தங்கும் ஆர்.என். ரவி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேசவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் வியாழக்கிழமை தமிழகம் திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில், ஆளுநர் ரவியின் திடீர் தில்லி பயணம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.