பயிர்க்காப்பீடு திட்டத்துக்கு 1,775 கோடி ஒதுக்கீடு!

ஆதி திராவிடர் பழங்குடி விவசாயிகளுக்கு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு
பயிர்க்காப்பீடு திட்டத்துக்கு 1,775 கோடி ஒதுக்கீடு!

2024-2025 ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.1,775 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேரவையில் இன்று (பிப். 20) தாக்கல் செய்தார்.

அதில் விவசாயிகளுக்காக பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்தார்.

மானாவாரி நிலங்களில் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம்த்தின் மூலம் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு

ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

ஒரு கிராமம் ஒரு பயிர்" திட்டம் மூலம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com