பிரதமர் மோடிக்கு சுவாமி சிலை பரிசளிப்பு
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு சுவாமி சிலை பரிசளிக்கப்பட்டது.


திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடிக்கு சுவாமி சிலை பரிசளிக்கப்பட்டது.
புது தில்லியில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த பிரதமர் நரேந்திர மோடியை திருச்சி விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்றனர்.
வழி நெடுகிலும் பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கு பாஜக, திமுகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில் பிரதமர் மோடி காரில் இருந்தபடியே கைகளை அசைத்துச் சென்றார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலை 10.30 மணியளவில் 38-ஆவது பட்டமளிப்பு விழா தொடங்கியது. விழாவில் பங்கேற்றுள்ள பிரதமா் நரேந்திர மோடிக்கு சுவாமி சிலை பரிசளிக்கப்பட்டது.
இதையும் படிக்க.. சென்னையில் அளவு குறைவான ஆவின் பால் விற்பனை!
பட்டமளிப்பு விழா தொடங்கிய நிலையில் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்ற 33 பேருக்கு பிரதமர் மோடி பட்டங்களை வழங்கினார். அருகில் தமிழக முதல்வர் மு க. ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் ஆகியோர் உள்ளனர்.
தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு சென்று புதிய முனையத்தை திறந்து வைக்கிறாா் பிரதமர் நரேந்திர மோடி. மேலும், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அா்ப்பணித்து, பல்வேறு துறைகளில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். இந்த இரண்டு விழாக்களிலும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், ஆளுநா் ஆா்.என். ரவி, மத்திய, மாநில அமைச்சா்கள் பங்கேற்கவுள்ளனா்.
தமிழகத்தில் ரூ.19,850 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களின் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி இன்று காலை திருச்சிக்கு வருகை தந்துள்ளார்.
தமிழகத்தைத் தொடா்ந்து லட்சத்தீவுக்கு பயணிக்கும் பிரதமா், அங்கு ரூ.1,150 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்க உள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...