விஜயகாந்த் நிஜத்திலும் கேப்டன்: திருச்சியில் மோடி உரை
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதாகக் கூறினார்.


திருச்சி: திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதாகக் கூறினார்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மறைந்த விஜயகாந்த்தை நினைவுகூர்ந்து பேசினார்.
பிரதமர் மோடி கூறுகையில், விஜயகாந்தை நாம் இழந்து உள்ளோம். விஜயகாந்த் நிஜத்திலும் கேப்டன்தான். சிறந்த தேசியவாதியாக திகழ்ந்தவர். சினிமாவிலும் அரசியலிலும் கேப்டனாக இருந்தவர் விஜயகாந்த். திரைப்படங்களில் அவரது செயல்பாடுகள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர். அரசியல்வாதியாக தேசிய நலனை மட்டுமே முன்னிறுத்தினார். விஜயகாந்த் குடும்பத்தாருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இதையும் படிக்க.. சென்னையில் அளவு குறைவான ஆவின் பால் விற்பனை!
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, மழை, வெள்ளம் காரணமாக, தமிழக மக்கள் கடந்த ஆண்டு கடுமையான துயரத்தை அனுபவித்தீர்கள். அதிக வலியை அனுபவித்தீர்கள். இந்தத் துயரமான நேரத்தில் தமிழகத்துக்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்து வருகிறது.
25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் இரண்டும் சேர்ந்த வளர்ச்சி தான். பாரத நாட்டின் வளம் மற்றும் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு தான் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் தான் திருவள்ளுவர் உள்ளிட்டோர் சிறப்பான இலக்கியங்களை படைத்துள்ளார்கள்.
திருச்சி என்று சொன்னாலே, அங்கிங்கெனாதபதி எல்லா இடங்களிலும் சிறப்பான விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன என்றார்.
மேலும் அவர் பேசுகையில், தமிழ்நாட்டிற்கு நான் வரும் போதெல்லாம் புதிய சக்தியை எனக்குள் நிரப்பி செல்கிறேன். எனக்கு ஏராளமான தமிழ் நண்பர்கள் உண்டு. அவர்களிடமிருந்து தமிழ் கலாச்சாராத்தை நான் கற்று கொள்கிறேன். நான் எங்கு சென்றாலும் தமிழ்நாட்டின் கலாச்சாரம் குறித்து பேச மறப்பதில்லை. எனக்கு தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் குறித்து உற்சாகம் அதிகரித்து கொண்டே இருக்கிறது என்றும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...