கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே மனைவியை கொன்றுவிட்டு கணவர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கீழபாண்டவர்மங்கலம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் இன்னாசிமுத்து(56). இவரது மனைவி மருதம்மாள்(54).
இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் இன்னாசிமுத்து வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் இன்னாசிமுத்து வீட்டு ஜன்னல் வழியாக பார்த்தபோது, மருதம்மாள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தது மட்டுமின்றி, அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்ற போது வீட்டின் உள்ளே இருந்த இன்னாசிமுத்து தப்பியோடியதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார் மருதம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அதிகரிக்கும் போர்ப்பதற்றம்.. சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்!

ஹோலி பண்டிகை: மாலை 5 முதல் இரவு 10 வரை நமோ பாரத், மீரட் மெட்ரோ சேவைகள் இயங்கும்

கமேனி கொல்லப்பட்டதற்கு கண்டனம்: காஷ்மீரில் 2-ஆவது நாளாக ஆா்ப்பாட்டம்

எல்லை வேலி அமைக்க 105 ஏக்கா் நிலம்: மத்திய அரசுக்கு ஒதுக்க மேற்கு வங்கம் முடிவு
வீடியோக்கள்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

