தச்சன் குறிச்சிக்கு ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஆர்வமுடன் வந்த திருநங்கை!

தச்சன்குறிச்சியில் சனிக்கிழமை நடைபெறும் போட்டிக்கு ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஆர்வமுடன் வந்த திருநங்கை ஐஸ்வர்யாவை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஆர்வமுடன் வந்த திருநங்கை ஐஸ்வர்யா.
தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஆர்வமுடன் வந்த திருநங்கை ஐஸ்வர்யா.


கந்தர்வகோட்டை: தமிழகத்தில் நிகழாண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி புதுக்கோட்டை மாவட்டம், தச்சன்குறிச்சியில் சனிக்கிழமை நடைபெறும் போட்டிக்கு ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஆர்வமுடன் வந்த திருநங்கை ஐஸ்வர்யாவை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும். இதன் தொடக்கமாக, புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே தச்சன்குறிச்சி கிராமத்தில் முதல் போட்டி நடைபெறுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டுக்கான முதல் போட்டி தச்சன்குறிச்சியில் சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. 

இந்த ஜல்லிக்கட்டு தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் திருநங்கையான ஐஸ்வர்யா, தமிழ் கலாசாரத்தின் மீது பற்றாலும், ஜல்லிக்கட்டு ஆர்வத்தாலும் நான்கு ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருவதாகவும், தற்போது தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியான தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டிற்கு  தனது இரண்டு காளைகளை கலந்து கொள்ள வைப்பதற்காக தேனியில் இருந்து 5 மாடுபிடி வீரர்களுடன் ஜல்லிக்கட்டுக்கு வந்துள்ளார். இவரிடம் நான்கு ஜல்லிக்கட்டு காளைகள் உள்ளதாகவும் கடந்தாண்டு ஜல்லிக்கட்டில் இவரது காளைகள் 28 முறை களம் கண்டுள்ளதாகவும், அவரது காளைகளை மாடுபிடி வீரர்கள் சுலபத்தில் பிடிக்க முடியாது எனவும், சீறி பாய்ந்து வாடி வாசலை அலறவிடும் காளைகள் என திருநங்கை ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். 

ஆர்வமுடன் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள காளையுடன் வந்த திருநங்கை ஐஸ்வர்யாவை அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com