கோவில்பட்டி அருகே கிளவிப்பட்டி விலக்கில் சாலை மறியல்

கோவில்பட்டி - காமநாயக்கன்பட்டி சாலையில் கிளவிபட்டி அருகே கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவில்பட்டி அருகே கிளவிப்பட்டி விலக்கில் சாலை மறியல்

கோவில்பட்டி: கோவில்பட்டி - காமநாயக்கன்பட்டி சாலையில் கிளவிபட்டி அருகே கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவில்பட்டி - காமநாயக்கன்பட்டி சாலையில் கிளவிபட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்திற்கு அரசு நகர பேருந்து மற்றும் சிற்றுந்துகள் முறையாக இயங்கவில்லை எனக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அண்மையில் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் தற்போது வரை கிராமத்திற்கு எந்த பேருந்துகளும் வந்து செல்லாததை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலர் தெய்வேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்ட முன்னாள் செயலர் கதிரேசன் ஆகியோர் தலைமையில் கிராம மக்கள் கோவில்பட்டி -காமநாயக்கன்பட்டி சாலையில் கிளவிபட்டி விலக்கு அருகே திங்கள் கிழமை காலை சுமார் 9 மணிக்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராமத்திற்கு முறையாக பேருந்துகள் இயக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவல் ஆய்வாளர் பத்மாவதி, உதவி ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து காலை 9 மணிக்கு தொடங்கிய சாலை மறியல் போராட்டம் காலை 9.55 மணிக்கு முடிவுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com