அங்கித் திவாரியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி

அங்கித் திவாரியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
அங்கித் திவாரியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி

அங்கித் திவாரியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரிய அமலாக்கத் துறையின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் சுரேஷ்பாபுவிடம், ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில், மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி கடந்த டிச.1ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

மாநில ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீஸாரின் விசாரணைக்கு பின் நீதிமன்ற காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் பிணையில் விடுவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட அங்கித் திவாரியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஜன.11-ஆம் தேதி வரை அங்கித் திவாரியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், அவரிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத் துறை சார்பில் திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை ஜன.5-ஆம் தேதி முதல் முறையாக ஒத்தி வைக்கப்பட்டது.

ஜன.9-ஆம் தேதி விசாரணையின் போது, ஜன.10-ஆம் தேதிக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் புதன்கிழமை விசாரணையின்போது, அமலாக்கத் துறையின் மனு மீதான விசாரணையை ஜன.12ஆம் தேதிக்கு தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மோகனா ஒத்தி வைத்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுமதி கோரிய மனுவை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com