இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாட்டை மாற்றுவதே இலக்கு: முதல்வர் ஸ்டாலின்

இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாட்டை மாற்றுவதே இலக்கு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :19 ஜனவரி 2024, 1:28 pm

DIN

இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாட்டை மாற்றுவதே இலக்கு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை பிரதமா் நரேந்திர மோடி இன்று மாலை தொடக்கி வைத்தார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அப்போது விழாவில் பிரதமர் மோடிக்கு வீரமங்கை சிலையை நினைவுப் பரிசாக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து ஆளுநர், மத்திய அமைச்சர்களுக்கு நினைவுப் பரிசை அமைச்சர் உதயநிதி வழங்கினார். இன்று கோலாகலமாகத் தொடங்கியிருக்கும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் வரும் 31-ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெறவிருக்கின்றன. 

இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. பிரதமர் விழாவை தொடக்கி வைக்க, விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா். மத்திய இளைஞா் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா், மத்திய இணையமைச்சா் நிசித் பிரமாணிக், தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றுள்ளனர்.

விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைக்க தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடியை வரவேற்கிறேன். எல்லோருக்கும் எல்லாம், அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சிக்காக திராவிட மாடல் ஆட்சியில் உழைத்து வருகிறோம். தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக மாற்றுவதே நமது குறிக்கோள். விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாட்டை மாற்றும் இலக்கை நோக்கி பயணிக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பாராட்டுகிறேன். விளையாட்டு கட்டமைப்புகளை உலகத் தரத்துக்கு உயர்த்தி வருகிறோம். 

இந்தியாவிலேயே முதல்முறையாக பாரா வீரர்களுக்கு 6 விளையாட்டு அரங்கங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக 10 சட்டமன்றத் தொகுதிகளில் மினி விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, நீலிகிரியில் ஒலிம்பிக் அகாடமி தொடங்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.63 கோடியில் மதுரையில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக ஏறு தழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. வரும் 24ஆம் தேதி ஜல்லிக்கட்டு அரங்கத்தை திறந்து வைக்க உள்ளேன். அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்பதை உள்ளடக்கமாக கொண்டதே திராவிட மாடல் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.