தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை பிரதமா் நரேந்திர மோடி இன்று மாலை தொடக்கி வைத்தார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அப்போது விழாவில் பிரதமர் மோடிக்கு வீரமங்கை சிலையை நினைவுப் பரிசாக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து ஆளுநர், மத்திய அமைச்சர்களுக்கு நினைவுப் பரிசை அமைச்சர் உதயநிதி வழங்கினார். இன்று கோலாகலமாகத் தொடங்கியிருக்கும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் வரும் 31-ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெறவிருக்கின்றன.