/

ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி!

ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்குச் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

News image
ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி
Updated On :20 ஜனவரி 2024, 9:36 am

DIN

ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்குச் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

ஸ்ரீரங்கம் கோயிலில் வழிபாடு முடித்துவிட்டு ராமேஸ்வரம் சென்றடைந்தார் பிரதமர் மோடி. அங்கு அவருக்கு பாஜக தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். 

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சாலை மார்க்கமாகச் சென்ற பிரதமர் மோடியை சாலையின் வழிநெடுகிலும் மலர் தூவி தொண்டர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர். 

Story image

ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் குளித்துவிட்டு ராமநாதசுவாமி கோயிலுக்குச் செல்கிறார் பிரதமர். கோயிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தக் கிணறுகளில் நீராடிவிட்டு ராமர் பாதத்தை தரிசிக்க உள்ளார். 

பிரதமரின் வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் மூன்று அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.