/

சிறார்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடுக்க வேண்டும்: திருமாவளவன்

சிறார்களை வேலைக்கு அமர்த்தும் கொடுமையைத் தடுக்க அரசு ஆணையம் அமைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

News image
சிறார்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடுக்க வேண்டும்
Updated On :20 ஜனவரி 2024, 7:09 am

DIN

சிறார்களை வேலைக்கு அமர்த்தும் கொடுமையைத் தடுக்க அரசு ஆணையம் அமைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

திமுக எம்எல்ஏவின் மகன், மருமகள் ஆகியோர் வீட்டு வேலைக்குச் சென்ற மாணவியை வதைத்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு விசிக தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள திருநருங்குன்றம் கிராமம், ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு நேர்ந்துள்ள வன்கொடுமைகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. 

மருத்துவம் படிக்கும் கனவிலிருந்த மாணவி வீட்டு வேலை செய்து வந்துள்ளார். வீட்டு உரிமையாளர்கள் மாணவியைக் கொடுமைப்படுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவியின் புகாரையடுத்து, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அரசியல் செல்வாக்குள்ள குடும்பம் எனினும் போலீஸ் வழக்குப்பதிவு செய்தது ஆறுதல்.

நெஞ்சில் ஈரமின்றி இவ்வாறு கொடுமைப்படுத்தும் கொடிய போக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்று அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.