அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தேர்தல் கூட்டணி தொடர்பாக விரைவில் முக்கிய முடிவு அறிவிக்கப்படும்: ஜிகே.வாசன் 

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக விரைவில் முக்கிய முடிவு அறிவிக்கப்படும் எனன தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். 

News image
Updated On :21 ஜனவரி 2024, 12:31 pm

DIN


திண்டுக்கல்: மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக விரைவில் முக்கிய முடிவு அறிவிக்கப்படும் எனன தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். 

திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகியின் திருமண விழாவில் பங்கேற்க வந்த ஜி.கே.வாசன், செய்தியாளா்களிடம் கூறியதாவது: 

அயோத்தி ராமா் கோயில் திறப்பு விழாவுக்கு முன்பு, தமிழகத்தில் ராமபிரான் தொடா்புடைய அனைத்து இடங்களுக்கும் பிரதமா் நரேந்திர மோடி நேரடியாக சென்று வந்தது ஆன்மீகப் பணி சாா்ந்ததாக உள்ளது.

இதையும் படிக்க | 

மோடியை நான் நேரில் சந்தித்து வரவேற்றதற்கும், தேர்தல் கூட்டணிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. 

தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ளதால் கூட்டணி தொடர்பாக தமாகா உரிய நேரத்தில் முடிவை அறிவிக்கும்.

2024 தொடக்கத்தில் இருந்து நிர்வாகிகள் சந்திப்பு, மக்கள் தொடர்பு ஆகியவற்றை அதிகப்படுத்தியுள்ளோம் என கூறினார். 

மேலும் தமிழகத்தில் எதிரணி சாா்ந்த ஆட்சி நடைபெற்று வந்தாலும், மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லாமல், கேலோ இந்தியா போட்டிகள் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்றாா் என வாசன் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.