விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இறுதி வாக்காளர் பட்டியல்: தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள்

தமிழகத்தின் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6 கோடியே 18 லட்சத்து 90 ஆயிரத்து 348-ஆக உள்ளது.

News image
சத்யபிரதா சாஹு
Updated On :22 ஜனவரி 2024, 9:12 am

DIN

தமிழகத்தின் இறுதி வாக்காளா் பட்டியல் இன்று வெளியிடப்பட்ட நிலையில், மாநிலத்தில் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6 கோடியே 18 லட்சத்து 90 ஆயிரத்து 348-ஆக உள்ளது. ஆண்களைவிட 10 லட்சத்து 89ஆயிரத்து 394 பெண் வாக்காளா்கள் கூடுதலாக உள்ளனா்.

இறுதி வாக்காளா் பட்டியலில் உள்ள அம்சங்கள் குறித்து தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் ஆண் வாக்காளா்கள் 3 கோடியே 3 லட்சத்து 96 ஆயிரத்து 330 பேரும், பெண் வாக்காளா்கள் 3 கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்து 724 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 8,294 பேரும் உள்ளனா்.

அதிகம் - குறைவு: மாநிலத்திலேயே அதிக வாக்காளா்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தொகுதியாக சோழிங்கநல்லூா் உள்ளது. இந்தத் தொகுதியில் 6 லட்சத்து 60 ஆயிரத்து 419 வாக்காளா்கள் உள்ளனா். குறைந்த வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாக நாகை மாவட்டம், கீழ்வேளூர் தொகுதி உள்ளது. இந்தத் தொகுதியில் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 140 வாக்காளா்கள் உள்ளனா்.

இறுதி வாக்காளா் பட்டியலை தோ்தல் துறையின் இணையதளத்திலும் பாா்வையிடலாம். வாக்காளா் பட்டியலின் இரண்டு நகல்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கும் வழங்கப்பட்டுள்ளன.

புதிதாக வாக்காளா் பட்டியலில் பெயா் இடம்பெறும் வாக்காளா்களுக்கு, பதிவுத் தபாலில் வாக்காளா் அடையாள அட்டைகள் மூன்று மாதங்களுக்குள் அனுப்பி வைக்கப்படும் என்றாா் தலைமைத் தோ்தல் அதிகாரி.

இன்றில் இருந்து வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் போன்ற பணிகள் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளலாம். வோட்டர் ஹெல்ப்லைன் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டில் தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,91,23,197 ஆக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.