மாதவரத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்: கட்டண விவரம் வெளியீடு!

மாதவரம் பேருந்து முனையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளின் கட்டண விவரம் வெளியாகியுள்ளது.
மாதவரத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்: கட்டண விவரம் வெளியீடு!

மாதவரம் பேருந்து முனையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளின் கட்டண விவரம் வெளியாகியுள்ளது.

வடசென்னை மக்களின் வசதிக்காக தென் மாவட்டங்களுக்கு செல்ல  20% பேருந்துகளை மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து அமைச்சர் சிவசங்கர் இன்று தொடக்கிவைத்தார். 

மாதவரம் பேருந்து முனையத்திலிருந்தும் திருச்சிக்கு 18, சேலத்துக்கு 17, விருத்தாசலத்துக்கு 6, கள்ளக்குறிச்சிக்கு 16, விழுப்புரத்துக்கு 16, கும்பகோணத்துக்கு 14, சிதம்பரத்துக்கு 5, நெய்வேலிக்கு 11, கடலூா் வழியாக புதுச்சேரி, திண்டிவனத்துக்கு 5, புதுச்சேரிக்கு திண்டிவனம் வழியாக 10, செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு 22, போளூா் மற்றும் வந்தவாசி ஊா்களுக்கு 20 என மொத்தம் 160 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மாதவரத்தில் இருந்து புறப்படும் பேருந்துகள் ரெட்டேரி, அம்பத்தூர், மதுரவாயல் புறவழிச்சாலை, கிளாம்பாக்கம் வழியாக  பல்வேறு ஊர்களுக்குச் செல்லும்.

இந்நிலையில், மாதவரம் - கிளாம்பாக்கம் ரூ. 40, ரெட்டேரி - கிளாம்பாக்கம் ரூ. 35, அம்பத்தூர் - கிளாம்பாக்கம் ரூ. 30, மதுரவாயல் - கிளாம்பாக்கம் ரூ. 25, பெருங்களத்தூர் - கிளாம்பாக்கம் ரூ. 10 வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு வழக்கமாக  வசூலிக்கப்படும் கட்டணத்துடன் சேர்த்து இந்தக் கட்டணமும் வசூலிக்கப்படும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com