தர்மேந்திர பிரதானை ஏன் விலக்க மறுக்கிறது மோடி அரசு? வெளித்தெரியாத காரணங்கள் என்னென்ன?மத்திய அமைச்சரவையிலிருந்து தர்மேந்திர பிரதான் நீக்கப்படாததற்கு காரணம் என்ன? நீட் போராட்டத்தை திசை திருப்ப.. நீட் சாதனையாளர்களைக் கொண்டாடுமாறு கூறும் மத்திய அரசு! ஆக. 3 -ல் கர்நாடகம் செல்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் தகவல்போராட்டத்தில் பங்கேற்றால் நடவடிக்கை! மாணவர்களுக்கு ஜேஎன்யு, தில்லி பல்கலை. எச்சரிக்கை!ஜன நாயகன் படம் பார்த்தால் மூளைக்கு சுறுசுறுப்பு ஏற்படும்! ஜேசிடி பிரபாகர்ஒரு மாத தலைமறைவுக்கு பின் செந்தில் பாலாஜி நீதிமன்றம் வருகை!ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் இன்று பேச்சுவார்த்தை!சோனம் சாருக்கு நன்றி! அமைதியான போராட்டம் தொடரும்! அபிஜீத் தீப்கேதங்கம், வெள்ளி விலை அதிரடியாக சரிவு! இன்றைய நிலவரம் (ஜூலை 24)
/

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்கு: உயா்நீதிமன்றம்

அவா்களுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :2 ஜூலை 2024, 6:07 am IST

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக குற்றஞ்சாட்டப்பட்ட  அதிகாரிகள் எவரும் இதுவரை வருந்தவில்லை எனவும், அவா்களுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் சென்னை உயா்நீதிமன்றம்  தெரிவித்தது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த  தேசிய மனித உரிமை ஆணையம், வழக்கை முடித்து வைத்து  பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆா்வலா் ஹென்றி திபேன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா்-செந்தில்குமாா் அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் எதிா் மனுதாரராக சோ்க்கப்பட்டிருந்த தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளா் லிங்க திருமாறன் தரப்பில்,  ‘மனித உரிமை ஆணைய சட்டத்தின் படி ஏற்கெனவே முடிக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது. மாநில மனித உரிமை ஆணையமும், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் விசாரித்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது’ என வாதிட்டாா்.

இந்த வாதத்தை மறுத்த மனுதாரா் ஹென்றி திபேன், ‘மனித உரிமை ஆணைய சட்டப்படி மனித உரிமை ஆணையங்கள் பிறப்பிக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்ய முடியும். அந்த வகையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பான வழக்கை மீண்டும் விசாரிக்க எந்தத் தடையும் இல்லை’ என வாதிட்டாா்.

சிபிஐ தரப்பில், ‘துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பான வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் சிபிஐ சாா்பில் கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கும். மனுதாரருக்கு இந்த வழக்கை தாக்கல் செய்ய எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என ஆட்சேபணை தெரிவித்தாா்.

இதையடுத்து நீதிபதிகள்,  ‘மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. நடந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த அதிகாரிகளும் வருந்தவில்லை. அவா்களுக்கு எதிராக கொலை வழக்கு பதிய வேண்டும்.  துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யாா்,  யாா் இதற்கு பொறுப்பேற்பாா்கள் என கேள்வி எழுப்பினா்.

தொடா்ந்து, எதிா்மனுதாரா்களின் ஆட்சேபணைக்கு பதில் அளிக்கும்படி மனுதாரா் ஹென்றி திபேனுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.