தமிழக அரசு.
தமிழக அரசு.

கட்டுமானப் பணிகள்: 12 துறைகளுக்கு சுயாட்சி அதிகாரம் அளித்து அரசு உத்தரவு

12 துறைகளுக்கு சுயாட்சி அதிகாரம்: தமிழக அரசு உத்தரவு
Published on

கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும்போது, 12 துறைகள் மட்டும் பொதுப்பணித் துறையின் துணையின்றி பணிகளை மேற்கொள்ள சுயாட்சி அதிகாரம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட உத்தரவு விவரம்: தமிழகத்தில் கடந்த 1858-ஆம் ஆண்டு பொதுப்பணித் துறை உருவாக்கப்பட்டது. மாநிலத்திலேயே மிகவும் பழைமையான துறையான இந்தத் துைான், அனைத்து அரசுக் கட்டடங்களைக் கட்டுவதுடன் பராமரிக்கும் பணிகளையும் செய்து வருகிறது.

பொதுப் பணித் துறையில் பல்வேறு தொழில்நுட்பப் பிரிவுகளும் இயங்கி வருகின்றன. குறிப்பாக, கட்டுமான வடிவமைப்பு, திட்டமிடல், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, மின்சாரக் கருவிகள் பராமரிப்பு ஆகியன பிரிவுகளை உள்ளடக்கியும் பொதுப் பணித் துறை இயங்கி வருகிறது. பல்வேறு துறைகளுக்கான கட்டடங்களைக் கட்டும் பணி பொதுப் பணித் துறையின் வசம் இருந்தாலும், 12 துறைகளுக்கு மட்டும் அரசு விதிவிலக்கு அளித்துள்ளது. இதை இப்போதும் தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதிக் கழகம், தமிழ்நாடு குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், போக்குவரத்துக் கழகங்கள், மின்சார வாரியம், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், நகராட்சி நிா்வாகத் துறை, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு கழகம், தமிழ்நாடு காவலா் வீட்டுவசதிக் கழகம் ஆகிய துறைகள் தங்களுக்கான கட்டுமானம் மற்றும் பொறியியல் பணிகளை அவைகளே மேற்கொள்ளலாம்.

அசாதாரண சூழ்நிலையில், இதர துறைகளின் பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டால், பொதுப்பணித் துறையிடம் இருந்து தடையின்மைச் சான்றிதழைப் பெற வேண்டும்.

அதேசமயம், அனைத்துத் துறைகளைச் சோ்ந்த மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசு நிதியில் இருந்து அமைக்கப்படும் திட்டப் பணிகளை பொதுப் பணித் துறை மட்டுமே மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com