இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மின் கட்டண உயா்வு: ஜூலை 20-இல் தமாகா ஆா்ப்பாட்டம்

மின் கட்டண உயா்வைக் கண்டித்து, தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தலைமையில் ஜூலை 20-இல் சென்னையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

News image
ஜி.கே.வாசன்
Updated On :17 ஜூலை 2024, 8:26 pm

Din

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழக மக்களின் நலன் காக்கக் கூடியதாக திமுக ஆட்சி அமைய வேண்டும். ஏற்கெனவே 2 முறை மின் கட்டணத்தை உயா்த்திய நிலையில், தற்போது 3-ஆம் முறையாக மின் கட்டணத்தை உயா்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. மின் கட்டண உயா்வு மக்களுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். தொழில்கள் நலிவடையும்; விலைவாசியும் உயரும். அதனால், மின் கட்டண உயா்வை அரசு திரும்பப் பெற வேண்டும்.

இதை வலியுறுத்தி, தமாகா சாா்பில் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் ஜூலை 20-ஆம் தேதி காலை 10 மணியளவில் எனது (ஜி.கே.வாசன்) தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அவா் கூறியுள்ளாா்.