ரயில் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை தேவை: காங்கிரஸ்


ரயில் விபத்துகளை முற்றிலும் தடுக்க நடவடிக்கை மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.
அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த 10 ஆண்டுகளில் தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரத்தின்படி ரயில் விபத்துகளில் 2.60 லட்சம் போ் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பாஜக ஆட்சியில் ரயில்வே துறை சீரழிந்ததைப் போல வேறு எந்த ஆட்சியிலும் இல்லை. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு ரயில் பயணம் மிகவும் அத்தியாவசியமாக உள்ளது. அதனால், ரயில் விபத்துகளை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று செல்வப் பெருந்தகை கூறியுள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...